Friday 28 November 2014

புற்றுநோய் பாதிப்பு: 3-வது இடத்தில் சென்னை!

 

தொற்றாத நோய்கள் (Non communicable diseases) தான் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் உருவாகி வரும் மருத்துவ அச்சுறுத்தல். இந்தத் தொற்றாத நோய்களில் ஒன்றான புற்றுநோய், சென்னை மக்களை மிகப் பெரிய அளவில் பாதித்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

நம் நாட்டில் தேசிய புற்றுநோய் பதிவுத் திட்டம் (National Cancer Registry Programme) மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு புற்றுநோய் பதிவேட்டை (Population Based Cancer Registry) வெளியிட்டிருக்கிறது. இதன் அடிப்படை நோக்கம், புற்றுநோய் தாக்குதலின் அளவை மதிப்பிடுவதுதான். இதன் மூலம் சமூகத்தில் புற்றுநோய் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவை புரிந்துகொள்ள முடியும்.

2006 முதல் 2008 வரையிலான 3 ஆண்டு காலத்தில் புற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் தொடர்பாக, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னைப் பதிவேட்டில் இருந்து நமக்குத் தெரிய வருபவை:
2008 வரையிலான மூன்று ஆண்டுகளில் நாட்டிலேயே அதிக புற்றுநோயாளிகள் பதிவானது. அதில், சென்னை மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மொத்தம் 15,258 புற்றுநோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் சென்னையில் ஆண் புற்றுநோயாளிகளைவிட பெண் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். (ஆண்கள் – 7392, பெண்கள் – 7866).
இதன்படி, சென்னையில் உள்ள ஆண்களில் 1 முதல் 64 வயது உள்ளவர்கள் இடையே 14-ல் ஒருவரையும், 1 முதல் 74 வயது உள்ளவர்கள் இடையே 8 பேரில் ஒருவரையும் புற்றுநோய் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல பெண்களில் 1 முதல் 64 வயது உள்ளவர்கள் இடையே 12-ல் ஒருவரையும், 1 முதல் 74 வயது உள்ளவர்கள் இடையே 8 பேரில் ஒருவரையும் புற்றுநோய் தாக்க வாய்ப்பு இருக்கிறது.

No comments:

Post a Comment