இளமையிலேயே வயதானது போல் மாறுகிறதா முகம்: தடுக்கும் முறை என்ன?
உங்கள் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும்
தென்படுகிறதா? உங்கள் முகத்தில் இளமையை பாதுகாக்கும் ஒரு அழைப்பாக இந்த
உணவுபத்தியத்தை தெரிந்து கொள்ளுங்கள். முகங்களில் சுருக்கங்கள் ஏற்பட்டால்
பெரும்பாலான பெண்கள் உடனே பீதி அடைந்து அருகில் உள்ள கடைகளுக்கு சென்று
முகப்பொலிவு கொடுக்கும் தயாரிப்புகளை தேடி அலைகிறார்கள்.
வயதானது போன்ற தோற்றம் இளம் வயதிலேயே வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வாழ்க்கை முறை, விருப்பங்கள் உணவு பழக்க வழக்கம், மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே வயதானது போல் சிலருக்கு முகங்களில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. இதை உணவு கட்டுப்பாடு மூலம் இதை கட்டுபடுத்த முடியும். எனவே கடைகளுக்கு செல்வதற்கு முன் உங்கள் சமையலறைக்கு சென்று கீழ்கண்ட உணவு கட்டுப்பாட்டை கடைபிடியுங்கள். இது உங்களை ஆரோக்கியமாகவும் இளைமை தேற்றத்துடன் வைக்க உதவலாம்
கீரைவகைகள்,
பச்சை இலை காய்கறிகள் குறிப்பாக கீரைகளில் விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை வயதான தோல் அடைவதை தடுக்கும் சக்தி கொண்டது. எனவே உங்கள் உணவில் கீரையை சேருங்கள்
சியா விதைகள்:
சியா விதைகள் உங்கள் தோல்களில் நலனுக்கு மிகவும் அவசியமானது. இவை உங்கள் முகத்துக்கு பிரகாசத்தை அளித்து உங்களை இளைமை பொலிவோடு வலம் வருவதற்கு உதவும்.
தக்காளி பழங்கள்
தக்காளி பழங்காளில் லகோபீன் மற்றும் வலுவான வயது எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ளதால் சூரிய வெளிச்சம், சுற்றுசூழல் மாசு உள்ளிட்ட வெளிப்புற தாக்குதல்களில் இருந்து உங்கள் தோலுக்கு மிகுந்த பாதுகாப்பு அரணாக விளங்கும்.
பாதாம் விட்டமின் ஈ சத்துக்களை கொண்டது.இதன் காரணாமாக இது உங்கள் தோல் சேதத்தை இது தடுக்க உதவும்.மேலும் இளமையை மீட்டெடுக்க இது மிகவும் உதவும். தண்ணீரில் ஊறவைத்த பாதமை சாப்பிடுவது உங்கள் தோல் சுகாதாரத்தை பேணிக்காக்க உதவும்.
No comments:
Post a Comment