Friday, 28 November 2014

கண்பார்வை பாதிப்பில் முன்னிலை வகிக்கும் ஏழை நாடுகள்!

 
 
உங்கள் பார்வைதிறன் பற்றிய சிறிய சந்தேகம் ஏற்பட்டாலும், உடனடியாக கண் டாக்டரை பார்க்கத் தவறாதீர்கள். ஏனென்றால், கிட்டப் பார்வை, வெள்ளெழுத்து, கேடராக்ட் போன்ற எளிமையாக தீர்க்கக்கூடிய கண் பிரச்சினைகள் முதல் குளுகோமா போன்ற மோசமான பார்வை குறைபாடுகள் வரை, உரிய நேரத்தில் மருத்துவரிடம் பரிசோதிக்கப்படாததாலேயே மோசமான நிலையை எட்டுகின்றன.

உலக அளவில் 28 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்வைதிறன் பாதிக்கப்பட்டோ, இழந்தோ இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

பெரும்பாலான கண் கோளாறுகள் எளிதில் குணப்படுத்தக்கூடிய பிரச்சினைகள்தான். பொருத்தமான கண்ணாடியை அணிவதாலோ, கண் புரை நீக்க அறுவைசிகிச்சை மூலமாகவோ அவற்றை குணப்படுத்திவிட முடியும்.
பெரும்பாலான ஏழை நாடுகளில் கண் மருத்துவர்கள் பரவலாக இருக்கின்றனர். ஆனால் ஏழைகளும் கிராமவாசிகளும் கண் மருத்துவர்களைச் சென்று பார்ப்பதில்லை அல்லது பார்ப்பதற்கான வசதி அவர்களுக்கு இருப்பதில்லை.

உலகில் கண்பார்வை பாதிப்புள்ளவர்களில் 90 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளது.

இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் கண் மருத்துவர்களால் குறைந்த எண்ணிக்கை கொண்டவர்களுக்கே, சேவை வழங்க முடிகிறது. அவர்களிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே காரணம்.

No comments:

Post a Comment