இரவில் நேரத்துடன் படுக்கைக்குச் செல்லாத குழந்தைகளின் மூளைத் திறன் பாதிக்கப்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
இரவு
அதிக நேரம் வரை விழித்திருக்கும் மூன்று வயது குழந்தைகள், பிற்காலத்தில்
கணிதம், புத்தக வாசிப்பு போன்றவற்றில் ஈடுபட சிரமப்படுகிறார்கள் என லண்டன்
பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தூக்கத்தின்
அளவு குறைந்துபோவதால் உடலின் இயற்கையான செயல்வேகம் பாதிக்கப்படுகிறது.
இதனால் புதிய தகவல்களை எளிதாக கிரகித்துக்கொள்ளும் மூளையின் திறன்
பாதிக்கப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேலும்
அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகளே, பொதுவாக நேரத்துக்கு தூங்க
முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
No comments:
Post a Comment