Friday 19 September 2014

2025–ம் ஆண்டில் 800 மில்லியன் மக்களை தண்ணீர் பற்றாக்குறை அச்சுறுத்தும்


2025–ம் ஆண்டில் 800 மில்லியன் மக்களை தண்ணீர் பற்றாக்குறை அச்சுறுத்தும்

 2025–ம் ஆண்டில் 800 மில்லியன் மக்களை தண்ணீர் பற்றாக்குறை அச்சுறுத்தும்


கோவை, செப்.19–
தண்ணீர் பற்றாக் குறைகள், பிரச்சினைகள், சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்த சொற்பொழிவு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பொன் விழா அரங்கில் நடைபெற்றது.
நீர்நுட்பவியல் இயக்குனர் பாண்டியன் வரவேற்று பேசினார். முனைவர் சிவனப்பன் தன்னுடைய நீர் ஆராய்ச்சி முடிவுகள் குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் நீர் வீணாவதை தடுக்க சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன முறைகளையும், நீரை அதிக அளவில் தேக்கி வைக்கும் விஞ்ஞான முறைகளையும் வலியுறுத்தினார்.
வேளாண்மை பல்கலைக் கழக துணைவேந்தர் ராமசாமி பேசும்போது நீரை உபயோகிக்கும் முறையில் 3 சதவீகித வேறுபாடுகள் காணப்படுவதால் 52 சதவீகிதம் நீரை பயன்பாட்டுக்கு கிடைக்கக் கூடியதாக இருப்பதால் கழிவுநீர் சுத்திகரிப்பு முறைகளை கையாள வேண்டும் என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காருண்யா பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் பேசியதாவது:–
தண்ணீர் பயன்பாடு மிகவும் சிக்கனமாக இருக்க வேண்டும். தண்ணீரை சேகரிக்க அதிநவீன தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்த வேண்டும். துபாய், பிரேசில் உள்ளிட்ட மேல்நாடுகளில் தண்ணீர் மேலாண்மை மிகவும் சிறப்பாக கடைபிடிப்பதால் தனிப்பட்ட மனிதனின் தண்ணீர் தேவை பாராட்டத்தக்கதாக இருக்கிறது. இந்தியாவில் கங்கை மற்றும் யமுனை நதிகள் அதிக அளவு நீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. சரஸ்வதி போன்ற நதிகள் இங்கு இல்லாமல் போய்விட்டது. மழையளவு குறையாவிட்டாலும் அது எல்லா இடங்களிலும் பரவலாக பெய்யாத நிலையில் தண்ணீர் பாதுகாப்பு 2025–ம் ஆண்டில் 800 மில்லியன் மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக அமையும்.
இந்தியா, கிழக்கு ஆசியா, சீனா, வட ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தண்ணீர் பற்றாக்குறையில் மிகவும் பாதிக்கப்படுவதோடு அகில உலக அளவில் தண்ணீருக்காகவே போராட்டம் மற்றும் முரண்பாடுகள் நாடுகளுக்கிடையே அதிகரிக்கும். கொலராடோ போன்ற நாடுகளில் ஒரு துளி தண்ணீர் கூட பகிர்ந்து கொள்ளாத நிலையில் தண்ணீர் தேவை 4 மடங்கு அதிகரித்ததோடு சராசரி நீர் தேவை அனைவருக்கும் கிடைக்காமல் இருக்கிறது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் 200–க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment