Wednesday 10 September 2014

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கலாமா? தெரிந்துகொள்ளுங்கள்!









உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
நம் வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமானத்திற்கும் உணவை உடைக்கவும் இது பயன்படுகிறது. இதுப்போக, உணவோடு சேர்ந்து செரிமானமான தொற்று இயற்றிகளை அழிக்கவும் இந்த சாறுகள் உதவுகிறது.
‘செரிமான தீ’ (ஆயுர்வேத நூல்களின் படி) என அழைக்கப்படும் இந்த செரிமான என்சைம்கள், நீங்கள் உண்ணும் உணவை உங்கள் வயிறு இறுக்கி, அரைக்க உதவும்.
அதனால் இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன் சேர்ந்து நீர்த்து போகும் போது, இது ஒட்டுமொத்த அமைப்பை மந்தமாக்குவதோடு, குடல் சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும்.
ஒட்டு மொத்த செரிமான அமைப்பும் தேங்கி போவதால், உட்கொண்ட உணவு வயிற்றிலேயே நீண்ட நேரத்திற்கு தங்கி, ஊட்டச்சத்தை உறிஞ்சி சிறு குடலுக்கு உணவு செல்லும் செயல்முறை தாமதமாகும்.
செரிமானத்திற்கு முதல் படியே எச்சில் தான். உணவை உடைப்பதற்கான என்சைம்கள் மட்டுமல்லாமல் செரிமான என்சைம்கள் சுரக்க ஊக்குவிக்கவும் உதவும்.
இதனால் செரிமான செயல்முறைக்கு தயாராகவும் உதவும். உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், எச்சில் நீர்த்து போகும். இது வயிற்றுக்கு பலவீனமான சிக்னல்களை அளிப்பதோடு மட்டுமல்லாமல், உடைபடும் உணவை வாயிலேயே நிறுத்தி விடும். இதனால் செரிமானம் இன்னும் சிரமமாகி விடும்.
சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதால் உங்கள் செரிமான அமைப்பு நீர்த்து போவதால், தொடர்ச்சியான உடல் சுகவீனத்தை அது ஏற்படுத்தும். சேச்சுரேட் ஆகும் வரை தண்ணீரை உறிஞ்சுவதை வயிறு நிறுத்தாது.
அதன் பிறகு இரைப்பை சாறுகளை தண்ணீர் நீர்க்க செய்யும். இதனால் சுரக்க வேண்டிய செரிமான என்சைம்களின் அளவு குறைந்துவிடும்.
இதன் மூலம் செரிமானமாகாத உணவுகள் உங்கள் அமைப்பில் இறங்கி, அமில எதிர்பாயல் மற்றும் நெஞ்சு எரிச்சலை ஏற்படுத்தும்.
உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால், அதிகளவில் கிளைசீமிக் உள்ள உணவுகளை உண்ணுவதை போல், உங்கள் இன்சுலின் அளவு அதிகரிக்கும்.
அதற்கு காரணம், உங்கள் உடலால் உணவை சரியாக செரிக்க வைக்க முடியவில்லை என்றால், உணவில் உள்ள குளுகோஸ் பகுதியை கொழுப்பாக மாற்றி அதனை உடலில் தேக்கி வைத்துவிடும்.
இதன் பின் இந்த செயல்முறை அதிக அளவிலான இன்சுலினை உங்கள் உடலில் எதிர்ப்பார்க்கும். இதனால் உடலின் ஒட்டுமொத்த இரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.
உணவருந்தும் போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மற்றொரு பொதுவான அறிகுறி – உடல் எடை அதிகரிப்பது.
இன்சுலின் அளவு அதிகரிப்பதால், உணவு உடையும் போது, அதிலுள்ள கொழுப்புகள் உடலில் தேங்கிவிடும்.
இதுபோக, உடல் பருமன் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது பலவீனமான செரிமான தீ என்று ஆயுர்வேதம் நம்புகிறது. இது உடலில் உள்ள வட, கபா மற்றும் பிட்டா உறுப்புகளுக்கு இடையே சமமின்மையை உருவாக்குவதோடு மட்டுமல்லாது உடல் வேலை செய்யும் முறையில் பாதிப்பை உண்டாக்கிவிடும்.
உணவருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பே தண்ணீர் குடியுங்கள். உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை உண்டாக்க வேண்டுமானால், உணவருந்தும் முன், அறை வெப்பநிலையை கொண்ட நீரை ஒருவர் குடிக்க வேண்டும்.
இதனால் உணவருந்தும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற ஆவலையும் இது குறைக்கும்.

No comments:

Post a Comment